தமிழ்த்தாய் வாழ்த்துTamil Thaai Vaazhthu
The Tamil Thaai Vaazhthu is a prayer-song that praises Tamil as a mother. It is the State Song of Tamil Nadu.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன்சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
Meaning
கடல் சூழ்ந்த நிலமகளின் ஒளிமிக்க முகம் போல் பரந்து விளங்கும் பாரத நாடு; அதன் தெற்கில் சிறந்து விளங்கும் திராவிடத் திருநாடு, அந்த முகத்தின் பிறை போன்ற நெற்றியில் இட்ட மணமிக்க திலகம் போன்றது. அந்தத் திலகத்தின் நறுமணம் போல உலகம் முழுவதும் மகிழ, எல்லாத் திசைகளிலும் புகழ் பரப்பும் தமிழ்த்தாயே! உன் என்றும் குன்றா இளமையின் ஆற்றலை வியந்து, எல்லாவற்றையும் மறந்து உன்னை வாழ்த்துகிறோம்!
The land is a maiden wrapped in the sea, and the great Indian subcontinent is her shining face. In its south lies the glorious Dravidian land, like the fragrant mark on the crescent of her forehead. As that fragrance spreads, may the whole world rejoice and your fame spread in every direction, O Tamil Mother! Wondering at your ever-young strength, we forget everything else and praise you.
Good to know
- பாடலை எழுதியவர்: மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (1855 – 1897)
Written by Manonmaniam Sundaram Pillai (1855 – 1897) - அவரது “மனோன்மணீயம்” நாடகத்தின் தொடக்கப் பாடல் (1891)
It opens his play “Manonmaniam” (1891) - இசை அமைத்தவர்: எம். எஸ். விஸ்வநாதன்
The tune was composed by M. S. Viswanathan - 1970 முதல் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது
Sung at the start of government functions since 1970 - 2021 டிசம்பரில் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது
Declared the State Song of Tamil Nadu in December 2021
எழுந்து நின்று பாடுவது வழக்கம்; தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
It is customary to stand while it is sung; in Tamil Nadu this is the practice at official events.